< Back
தேசிய செய்திகள்
நிதி நிறுவனங்களில் டெபாசிட்தாரர்களை பாதுகாக்க மசோதா-சட்டசபையில் நிறைவேறியது
தேசிய செய்திகள்

நிதி நிறுவனங்களில் டெபாசிட்தாரர்களை பாதுகாக்க மசோதா-சட்டசபையில் நிறைவேறியது

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

நிதி நிறுவனங்களில் டெபாசிட் தாரர்களை பாதுகாக்க மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று சட்டத்துறை மந்திரி மாதுசாமி, நிதி நிறுவனங்களில் டெபாசிட் தாரர்களின் வைப்புத்தொகைக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மாதுசாமி பேசியதாவது:-

தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் தங்களின் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். அவர்களின் அந்த தொகைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். மேலும் அந்த நிறுவனங்களில் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அத்தகையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் இந்த திருத்தம் வழிவகை செய்கிறது. மேலும் இத்தகைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படுகிறது. இதனால் நிதி மோசடிகள் குறித்த வழக்குகளை விரைவாக விசாரித்து கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்கும்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

மேலும் செய்திகள்