< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்காள தேசம்: டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778-ஆக உயர்வு
|16 Sept 2023 12:34 AM IST
வங்காள தேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 778-ஆக உயர்ந்துள்ளது.
டக்கா,
இது குறித்து அந்த நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 1,57,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், டெங்கு பாதிப்பு குறித்து முழுமையாக பதிவு செய்யப்படதாதால், உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா.வின் சிறுவர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.