< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஓலா, ஊபர் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
|13 Oct 2022 12:15 AM IST
ஓலா, ஊபர் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த ஆட்டோக்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்த அரசு கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஓலா, ஊபர் செயலிகளுக்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் பெங்களூருவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ) முன்பு நேற்று ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.