< Back
தேசிய செய்திகள்
வழி தெரியாமல் உதவி கேட்ட டெலிவரி ஏஜெண்டை தாறுமாறாக தாக்கிய பெண்
தேசிய செய்திகள்

வழி தெரியாமல் உதவி கேட்ட டெலிவரி ஏஜெண்டை தாறுமாறாக தாக்கிய பெண்

தினத்தந்தி
|
23 Aug 2023 4:27 PM IST

டெல்லியில் டெலிவரி ஏஜெண்டை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

டெல்லியில் துவாரகா பகுதியில் பார்சலை டெலிவரி செய்ய வந்த ஏஜெண்டுக்கு வழி தெரியாததால் ஒரு பெண்ணிடம் முகவரி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் டெலிவரி ஏஜெண்டின் ஸ்கூட்டியை கீழே தள்ளியதுடன், கத்தியால் அவரை குத்தி உள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி உள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத பெண், அருகில் கிடந்த கம்பை எடுத்து போலீஸ் வாகனம் மற்றும் மற்ற கார்களையும் சேதப்படுத்த முயன்றார். அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை கைது செய்ய முயன்றபோது அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த டெலிவரி ஏஜெண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒரு பார்சலை வழங்குவதற்காக தான் அப்பகுதிக்கு வந்ததாகவும், முகவரி கேட்டபோது அவர் தன்னை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட டெலிவரி ஏஜெண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்