< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!
தேசிய செய்திகள்

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

தினத்தந்தி
|
8 March 2023 12:17 AM IST

யமுனையில் நீரோட்டம் குறைந்ததால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி நகரின் தண்ணீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி தண்ணீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள். மீதமுள்ள தண்ணீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள்.

டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் தண்ணீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.வழக்கமாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அரியானா மாநிலத்தில் யமுனையில் அதிகப்படியான மணலை அள்ளியதால்தான் தண்ணீர் வற்றிப்போனதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கிற தண்ணீரும் ரசாயனம் கலந்திருப்பதால் அதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்