< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி: கொட்டித் தீர்த்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
|10 July 2023 10:45 PM IST
யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புதுடெல்லி,
வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி யமுனா நதியில் அபாயகட்டமான 205.33 மீட்டர் உயரத்தை எட்டியதாக அம்மாநில பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது.