டெல்லி: மத்திய மந்திரி இல்லத்தில் நடனம் ஆடி ஹோலி கொண்டாடிய அமெரிக்க வர்த்தக மந்திரி
|டெல்லியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடனம் ஆடி அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
புதுடெல்லி,
அமெரிக்க வர்த்தக மந்திரி கினா ராய்மோண்டோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த பயணத்தில், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு இந்தியாவுக்கு வந்த அவர், டெல்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இல்லத்திற்கு இன்று காலை சென்றார்.
அவரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வரவேற்றார். இதன் பின்னர் அவருக்கு ஆரத்தி எடுத்து, பூமாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒருவருக்கு ஒருவர் வண்ண பொடிகளை தூவினர்.
அமெரிக்க வர்த்தக மந்திரி கினா சுற்றியிருந்தவர்களுடன் ஒன்றாக நடனம் ஆடியபடி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார். இந்த விடுமுறை தினத்தில் நான் கலந்து கொள்வது எனக்கு கவுரவம் அளிக்கிறது. மத்திய மந்திரியின் வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது. அது அற்புதம் வாய்ந்தது. மகிழ்ச்சியான ஹோலி பண்டிகை வாழ்த்துகள் என கூறியுள்ளார்.