< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி
|21 March 2024 11:54 AM IST
இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுடெல்லி,
டெல்லி கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில் முதல் தளம் காலியாகவும், தரைத் தளத்தில் சிறிய ஆடை தயாரிப்பு கடையும் இயங்கி வந்தன. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில், தரைத் தளத்தில் உள்ள கடையில் பணிபுரிந்த அர்ஷத்(30) மற்றும் தவுஹித்(20) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ரெஹான்(22) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிட உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.