< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் ஜூலை 18 வரை மூடல்
தேசிய செய்திகள்

டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் ஜூலை 18 வரை மூடல்

தினத்தந்தி
|
16 July 2023 11:10 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், டெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூடப்படும் என கல்வி இயக்குனரகம் (டிஓஇ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்