பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
|ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.
பிரதமர் மோடி டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார். பள்ளி குழந்தைகள் அவருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர். முன்னதாக ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ரக்சா பந்தன். இந்த நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அளிப்பது வழக்கம். குறிப்பாக வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.