< Back
தேசிய செய்திகள்
டெல்லி: ரூ.920 கோடி மதிப்பில். 6 சுரங்கப்பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

டெல்லி: ரூ.920 கோடி மதிப்பில். 6 சுரங்கப்பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
19 Jun 2022 9:29 AM IST

டெல்லியில், பிரகதி மைதான் திட்டத்தின் பிரதான சுரங்கம் உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

புதுடெல்லி,

டெல்லியில், பிரகதி மைதான் திட்டத்தின் பிரதான சுரங்கம் உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் 920 கோடி ரூபாய் மதிப்பில் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பான தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை உலகத் தரத்தில் சுரங்கப்பாதைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரதான சுரங்கப்பாதை உட்பட 6 சுரங்கப்பாதைகளை, காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பைரோன் மார்க்கில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்