< Back
தேசிய செய்திகள்
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
27 Sept 2022 11:53 PM IST

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேறவும், பழைய யமுனா பாலத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய குறியான 205.33 மீட்டரை எட்டியுள்ளது. நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் இரண்டாவது முறையாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மக்கள் சமூக கூடங்கள், பள்ளிகள் மற்றும் தற்காலிக கூடாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்