டெல்லியின் பஜன்புரா பகுதியில் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!
|பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லியின் பஜன்புரா பகுதியில் ஹனுமான் கோயில் மற்றும் மஜார் ஆகியவற்றை டெல்லி பொதுப்பணித்துறை அகற்றியது.
புதுடெல்லி,
பொதுப்பணித்துறையின் உத்தரவின்படி, டெல்லியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மற்றும் மத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ள மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட அனுமான் கோயில் மற்றும் மஜாரை டெல்லி பொதுப்பணித்துறை (PWD) இடித்ததால், இன்று காலை நகரின் பஜன்புரா பகுதியில் பலத்த போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடிப்பு நடவடிக்கையை டெல்லி பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய வடகிழக்கு டிசிபி ஜாய் என் டிர்கி, "பஜன்புரா சவுக்கில் அமைதியான முறையில் இடிப்பு பணி நடைபெற்று வருகிறது. சஹாரன்பூர் நெடுஞ்சாலைக்கான சாலையை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஒரு அனுமான் கோயில் மற்றும் மஜாரை அகற்ற டெல்லி மதக் குழு முடிவு செய்துள்ளது. இரண்டு கட்டமைப்புகளும் அமைதியான முறையில் அகற்றப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.