< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஷ்ரத்தா கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமித்ஷா
|24 Nov 2022 3:57 PM IST
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, குற்றவாளிக்கு கடும் தண்டனை குறுகிய காலத்தில் கிடைப்பதை டெல்லி போலீஸும் விசாரணை அமைப்பும் உறுதி செய்யும் என்றார்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா, அவரது காதலனான அப்தாப் பூனாவாலாவால் டெல்லியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அப்தாப் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியெறிந்தார்.
கடந்த மே மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய கொலையாளி ஷர்த்தாவுக்கு கடும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, குற்றவாளிக்கு கடும் தண்டனை குறுகிய காலத்தில் கிடைப்பதை டெல்லி போலீஸும் விசாரணை அமைப்பும் உறுதி செய்யும் என்றார்.