< Back
தேசிய செய்திகள்
பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறிய ராகுல்காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீசு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறிய ராகுல்காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீசு

தினத்தந்தி
|
17 March 2023 12:47 AM IST

பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறிய ராகுல்காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீசு அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி போலீசார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தி ஒரு வாக்குமூலத்தை அளித்தார், "பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று குறிப்பிட்டார். இதுகுறித்து விளக்கம் கேட்டு, நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

"பாதிக்கப்பட்டதாக கூறி உங்களை சந்தித்த பெண்கள் குறித்த விவரங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்" என்று போலீசார் நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்