பிரிஜ் பூஷன் மீதான எப்.ஐ.ஆர் ஐ ரத்து செய்ய வேண்டும் - டெல்லி காவல்துறை
|பிரிஷ் பூஷணுக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் தான் பிரிட்ஜ் பூஷன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறுமி அளித்த பாலியல் புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றப்பத்திரிக்கையை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், சிறுமி அளித்த புகாரில் பிரிஷ் பூஷன் மீது போக்சோவில் வழக்கு பதிவான நிலையில் அதனை ரத்து செய்ய வேண்டும்.பிரிஷ் பூஷன் மீது சிறுமி அளித்த புகாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
சிறுமி அளித்த புகாரில் மீது அவரது தந்தை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்தார். சிறுமி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கை ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை தாக்கல் செய்த 1100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை அடிப்படையில், ஜூன் 22ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.