< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைதான அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் - மகளிர் ஆணையம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைதான அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் - மகளிர் ஆணையம்

தினத்தந்தி
|
27 Aug 2023 3:27 AM IST

டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைதான அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் உள்ளதாக மகளிர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா பற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், டெல்லி அரசின் தலைமைச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அந்த அதிகாரி மீது ஏற்கனவே 4 பாலியல் புகார்கள் வந்துள்ளன என்றும், அதில் தனித்தனியாக 3 பெண்கள் தெரிவித்த புகார்கள் கோர்ட்டு வரை சென்றன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க, பாலியல் பிரச்சினைகளை கையாளும் தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு சுவாதிமாலிவால் பரிந்துரைத்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்