< Back
தேசிய செய்திகள்
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பெரு நகரங்கள் பட்டியல்: தலைநகர் டெல்லி முதலிடம்

Image Courtesy: PTI  

தேசிய செய்திகள்

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பெரு நகரங்கள் பட்டியல்: தலைநகர் டெல்லி முதலிடம்

தினத்தந்தி
|
29 Aug 2022 10:18 PM IST

2020 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பெருநகரங்களில் முதல் இடத்தில் தேசிய தலைநகர் டெல்லி இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக 2021 ஆம் ஆண்டில் 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 40% அதிகமாகும். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 32.20 சதவீதம் டெல்லியில் பதிவாகியுள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் செய்திகள்