< Back
தேசிய செய்திகள்
மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரம்.. நண்பர் அடித்து கொலை
தேசிய செய்திகள்

மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரம்.. நண்பர் அடித்து கொலை

தினத்தந்தி
|
29 April 2024 9:38 PM IST

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் பழைய லஜ்பத் ராய் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் குலாப் ஜா(39). இவரது நண்பர் மனோஜ் குமார் குப்தா(28) அட்டைப்பெட்டிகளை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

மனோஜ் குமார் குப்தா, தனது நண்பரான குலாப் ஜாவின் மனைவியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது குலாப் ஜாவுக்கு பிடிக்கவில்லை. சந்தேக எண்ணத்துடன் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்துமாறு மனோஜ் குமார் குப்தாவிடம் குலா ஜா கூறி வந்துள்ளார். எனினும், நண்பர் கூறியதை கேட்காமல் அவரது மனைவியிடம் தொடர்ந்து மனோஜ் குமார் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று குலாப் ஜா, மனோஜ் குமார் குப்தாவை மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்துமாறு மனோஜ் குமாரிடம் குலாப் ஜா கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த குலாப் ஜா, மனோஜ் குமாரின் தலையில் செங்கலை எடுத்து அடித்ததுடன், கண்ணாடி பாட்டிலை எடுத்து மனோஜ் குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் குமார் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இடத்தை விட்டு குலாப் ஜா தப்பியோடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியான குலாப் ஜாவை கைதுசெய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்