< Back
தேசிய செய்திகள்
இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி பெண் பிரபலத்திடம் ரூ.90 ஆயிரம் மோசடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி பெண் பிரபலத்திடம் ரூ.90 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
28 April 2023 5:44 AM IST

இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி பெண் பிரபலத்திடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருந்து வந்தார். 8 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். கடந்த மாதம் அவரது கணக்கு திடீரென முடக்கப்பட்டது. இந்தநிலையில் அவரை ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் கணக்கை பழைய நிலைக்கு மீட்டு தருவதாக கூறினார்.

அதற்காக இளம்பெண்ணிடம் பல தவணைகளில் ரூ.90 ஆயிரம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. எனினும் இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டு தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த இளம்பெண் போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் ஜூனைத் பெக் (வயது 20) என்பதும், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து அவர்களது கணக்குகளில் உள்ள தவறான பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகாரளித்து அதனை முடக்கி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்