டெல்லி: மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கனவன் தூக்கிட்டு தற்கொலை
|டெல்லியில் மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கனவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியின் கிழக்கு உத்தம் நகரில் மனைவியுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த 41 வயதான திரிவேதி என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் நான்கு பக்க தற்கொலைக் குறிப்பில், குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி, குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்றதாகவும், சமூக வலைதளங்களின் மூலம் அவரைத் தடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், மனைவி திரும்பி வராததால், மனமுடைந்த அவர் மே 30 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது, திரிவேதியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இறந்தவரின் உறவினர்களிடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.