< Back
தேசிய செய்திகள்
டெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு
தேசிய செய்திகள்

டெல்லி: அனுமதி இல்லாமல் புறப்பட்ட இண்டிகோ விமானம் - விசாரணைக்கு உத்தரவு

தினத்தந்தி
|
30 Jan 2024 6:44 PM IST

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 28-ந்தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிற்கு இண்டிகோ விமானம் 6E 1803 புறப்பட்டுச் சென்றது. ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை(ஏ.டி.சி.) அனுமதி இல்லாமல் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக ஏ.டி.சி.யின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில், சம்பந்தப்பட்ட இண்டிகோ விமானத்தில் இருந்த விமானிகளிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பயணிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்