< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சசி தரூர் மீதான அவதூறு வழக்கு; ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
|29 Aug 2024 8:29 PM IST
சசி தரூர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பெங்களூருவில் 2018-ல் நடைபெற்ற இலக்கிய விழாவில், பிரதமர் மோடியை சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியதாக கூறி, அவருக்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜீவ் பபார் என்பவர் டெல்லி பட்டியாலா கோர்ட்டில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசி தரூர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அனுப் குமார் மெந்திரத்தா இன்று விசாரித்தார். அப்போது சசி தரூர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதி, செப்டம்பர் 10-ந்தேதி சசி தரூர் விசாரணை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.