< Back
தேசிய செய்திகள்
பள்ளி பாடத்தில் தர்மம், மதத்தை சேர்க்கக் கோரி மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

பள்ளி பாடத்தில் தர்மம், மதத்தை சேர்க்கக் கோரி மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
8 Nov 2023 5:17 PM IST

ஆவணங்களில் மதம் என்பதன் சரியான அர்த்தத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், ரேஷன் கார்ட்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களில் மதம் என்பதன் சரியான அர்த்தத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தர்மம் என்பது மதம் அல்ல என்றும், தர்மம் என்பது பிரிவினையற்றது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தர்மம் என்பது பிரபஞ்ச ஒழுங்கையும், தனிப்பட்ட அளவிலான உணர்வு ஒழுங்கையும் புரிந்து கொள்வதற்கான தேடல் என்று குறிப்பிட்டுள்ள அவர், பள்ளி பாடத்தில் மதம் மற்றும் தர்மம் என்ற அத்தியாயத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி துஷார் ராவ் கெடெலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவிற்கு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 2024 ஜனவரி 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்