< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பணியை நிரந்தரமாக்கக்கோரி டெல்லியில் நர்சுகள் வேலைநிறுத்தம்
|3 Nov 2022 3:50 AM IST
தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று டெல்லியில் நர்சுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளின் நர்சுகள் நேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்கினர். 4-ந் தேதிவரை, காலை 9 மணி முதல் 11 மணிவரை மட்டும் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும், நீண்ட காலம் நிலுவையில் உள்ள பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், காலி பணியிடங்களில் புதிய நர்சுகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது.
அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு பணிகள், வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படாது என்றும், புறநோயாளிகள் பிரிவு மற்றும் வார்டு சேவைகள் பாதிக்கப்படும் என்றும் டெல்லி செவிலியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.