< Back
தேசிய செய்திகள்
பிறந்த குழநதைகளை விற்பனை செய்துவந்த 7 பேர் கைது: டெல்லி போலீசார் அதிரடி
தேசிய செய்திகள்

பிறந்த குழநதைகளை விற்பனை செய்துவந்த 7 பேர் கைது: டெல்லி போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
19 July 2022 6:28 AM IST

பிறந்த குழந்தைகளை விற்றுவந்த கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 2 ஆண்களை டெல்லி போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

புதுடெல்லி,

புதிதாகப் பிறந்த குழந்தைகளை தத்தெடுப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களுக்கு விற்ற கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கஆண்களை டெல்லி போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பப்லு ஷா, 28, பர்கா, 28, வீணா, 55, மது ஷர்மா, 50, ஜோதி, 32, பவன், 45, மற்றும் சல்மி தேவி, ஆகியோர் ஆவர். ஒரு ரகசிய தகவலின் பேரில் உத்தம் நகரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஆண் குழந்தையை விற்க வந்த 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

அவர்கள் குழந்தையை ரூ. 6.5 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே கும்பலைச் சேர்ந்த பவன் மற்றும் சிம்ரன் ஆகிய இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்