< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
|30 Oct 2023 10:17 PM IST
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.