< Back
தேசிய செய்திகள்
சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
24 Jan 2023 4:35 AM IST

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அவரை விசாரணைக்காக அமலாக்கத்துறை பலமுறை அழைத்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி சைலேந்தர் மாலிக் உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார். இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு ஒன்று நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்