< Back
தேசிய செய்திகள்
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

தினத்தந்தி
|
7 Feb 2023 12:39 AM IST

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வின் உபாத்தியாயா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சதீஷ்சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, இதுபோன்ற உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு பிறப்பிக்க முடியாது. நீதிபதிகள் சட்டம் இயற்றுவது கிடையாது என தெரிவித்து, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்