< Back
தேசிய செய்திகள்
டெல்லி மாநகராட்சி தேர்தல்: வானதி சீனிவாசன்- குஷ்பூ வாக்கு சேகரிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: வானதி சீனிவாசன்- குஷ்பூ வாக்கு சேகரிப்பு

தினத்தந்தி
|
26 Nov 2022 8:10 AM IST

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

இதனை ஒட்டி பாஜக வேட்பாளரை ஆதரித்து , பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான குஷ்பூ, தமிழர்கள் வசிக்கும் "ஜல் விஹார்" பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊழல் செய்ததாக கூறி குஷ்பூ, பிரசாரம் செய்தார்.

அப்போது ஏராளமான பெண்கள், குஷ்பூ உடன் செல்பி எடுத்து கொண்டனர். இதே போல், வசீர்பூர், உள்ளிட்ட பகுதிகளில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்