< Back
தேசிய செய்திகள்
டெல்லி மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

தினத்தந்தி
|
4 Dec 2022 4:33 PM IST

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.30 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளை சுற்றி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்