< Back
தேசிய செய்திகள்
டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை

தினத்தந்தி
|
7 Dec 2022 8:39 AM IST

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆம் ஆத்மி 124 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 120 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்