< Back
தேசிய செய்திகள்
வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு...!
தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு...!

தினத்தந்தி
|
4 Dec 2022 12:31 PM IST

வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.



புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாக்காளர் பட்டியலில் மனைவி பெயர் உள்ளது, ஆனால் தனது பெயர் இல்லை என தேர்தல் பணியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடி சென்று காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி வாக்களித்தார்.

மேலும் செய்திகள்