தியானத்தில் பங்கேற்கும் கெஜ்ரிவால்; டெல்லி மக்களுக்கும் பரிந்துரை
|டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ‘விபாசனா’ எனப்படும் தியானத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 'விபாசனா' எனப்படும் தியானத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். கடந்த ஆண்டுகளில் தரம்கோட், நாக்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்த தியானத்தில் பங்கேற்றிருந்தார்.
இந்த வரிசையில் இந்த ஆண்டும் நேற்று முதல் அவர் விபாசனா தியானத்தில் பங்கேற்று உள்ளார். இந்த முறை எங்கு அவர் இந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'விபாசனா தியானத்துக்காக இன்று (நேற்று) செல்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை இதை நான் செய்து வருகிறேன். நான் ஜனவரி 1-ந் தேதி திரும்பி வருகிறேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இந்த ஞானத்தை போதித்தார். நீங்கள் விபாசனா பயிற்சி செய்தீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை செய்ய வேண்டும். இது நிறைய உடல், மன மற்றும் ஆன்மிக நன்மைகளை கொண்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்' என குறிப்பிட்டு இருந்தார்.