< Back
தேசிய செய்திகள்
நாளை குஜராத் செல்கிறார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

நாளை குஜராத் செல்கிறார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
5 Jan 2024 8:51 AM IST

அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

டெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 4 வது முறையாக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவர் நாளை குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி தலைமை கூறியதாவது,

வரவிருக்கும் மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு தில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை புறப்படுவார். இந்த பயணத்தின்போது அவர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவாா். கட்சித் தொண்டா்களை சந்தித்து அவர் கலந்துரையாடுவாா். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சைதா் வாசவாவை அவா் சந்திப்பாா். இவ்வாறு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்