< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
10 May 2024 7:21 PM IST

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும், ஜூன் 2ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே தொண்டர்களை பார்த்து கையசைத்த கெஜ்ரிவால், தொடர்ந்து காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டார். கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்