< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
|10 Oct 2022 8:37 AM IST
டெல்லி, லஹோரி கேட் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்னதாக இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் தற்போது மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சம்பவ இடத்தில் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 மீட்புப்பணி குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.