பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு
|ராம ராஜ்ஜியத்தின் கனவை நனவாக்க அரசு முயற்சித்து வருவதாக டெல்லி நிதி மந்திரி அதிஷி கூறியுள்ளார்.
புதுடெல்லி
தமிழகத்தை போல டெல்லியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டுக்கான டெல்லி அரசின் ரூ.76,000 கோடி பட்ஜெட்டை நிதி மந்திரி அதிஷி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் 'முக்கியமந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தின் கீழ் டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதி மந்திரி அதிஷி பேசியதாவது:
நாங்கள் அனைவரும் ராமராஜ்ஜியத்தால் ஈர்க்கப்பட்டோம். நாங்கள் உழைக்கிறோம். ராம ராஜ்ஜியத்தின் கனவை நனவாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 2,121 மாணவ-மாணவியர் 2023ல் ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.