டெல்லி சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியதால் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
|சூரத்திலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியதால் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அகமதாபாத்,
சூரத்திலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் மீது பறவை மோதியதால் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (26.02.2023) சூரத்திலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானம் 6E-646 (சூரத் - டெல்லி) மீது பறவை மோதியதால் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 2-வது என்ஜின் மின்விசிறி கத்திகள் சேதமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் தரையில் உள்ள விமானமாக அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) கொச்சியில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2407 மருத்துவ அவசரநிலை காரணமாக போபாலுக்கு திருப்பி விடப்பட்டது. போபாலில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையக் குழு, பயணியை இறக்கி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பாக மாற்றியதாக போபால் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.