< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி: ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது
|1 Sept 2022 11:52 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தியதாக டெல்லி விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் ரூ.65.57 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாயன்று ரியாத்தில் இருந்து டெல்லி வந்த நபர் ஒருவரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் விமான நிலையத்தின் கழிவறையில் வைத்து ஒப்பந்த ஊழியரிடம் ஒப்படைக்கவிருந்த 1.4 கிலோ எடையுள்ள செவ்வக வடிவிலான 12 தங்கக் கட்டிகள் அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரிடமிருந்து ரூ.65.57 லட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிபுரிந்து வருகிறார்.