< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடுமையான பனி மூட்டம்; டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்
|26 Dec 2023 11:19 AM IST
டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று 30 விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடுமையான பனி மூட்டம் காரணமாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய 30 விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து, பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.