< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  காலணி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
தேசிய செய்திகள்

டெல்லி: காலணி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

தினத்தந்தி
|
10 May 2024 3:49 AM IST

டெல்லியில் டெல்லி காலணி தொழிற்சாலையின் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் நேற்றிரவு தீப்பற்றி கொண்டது.

புதுடெல்லி,

டெல்லியின் நரேலா பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தீயணைப்பு துறையின் துணை தலைமை அதிகாரி ஏ.கே. மாலிக் கூறும்போது, இரவு 8.05 மணியளவில் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தீப்பற்றி கொண்டது என தெரிய வந்தது. தீயை கட்டுப்படுத்தி விட்டோம்.

குளிர்விக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். விரைவில் தீயை அணைத்து விட்டோம் என்று கூறியுள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

மேலும் செய்திகள்