< Back
தேசிய செய்திகள்
டெல்லி; ஓட்டலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை
தேசிய செய்திகள்

டெல்லி; ஓட்டலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை

தினத்தந்தி
|
21 Aug 2023 12:39 PM IST

ஓட்டலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்

புது டெல்லி,

டெல்லி நேதாஜி சுபாஷ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வினய் என்பவர் தன்னுடைய உறவினர் ஒருவருடன் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு கும்பலுடன் இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே அந்த கும்பலில் இருந்த ஒருவன் வினயை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டான்.

வலியால் துடித்த வினயை அருகிலுள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மற்றவர்களை தேடி வருகின்றனர். அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்