< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி ,சுவர் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
|15 July 2022 3:28 PM IST
மீட்பு பணி தொடர்கிறது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்
புதுடெல்லி,
டெல்லி,அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது .இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தொடர்கிறதுஎன டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.