< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் சோகம்:  2 மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை
தேசிய செய்திகள்

டெல்லியில் சோகம்: 2 மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை

தினத்தந்தி
|
15 Sept 2024 11:39 PM IST

டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் கட்டிடத்தின் 7-வது தளத்தில் இருந்து கீழே குதித்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஐ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிப்பை படித்து வந்தவர் கவுதம் குமார் (வயது 25). அவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கட்டிடத்தின் 7-வது தளத்திற்கு இன்று சென்ற அந்த மாணவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில், தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதேபோன்று டெல்லியில் மற்றொரு சம்பவத்தில், எம்.டி. 2-ம் ஆண்டு படிப்பை படித்து வந்தவர் நவ்தீப் (வயது 25). அவருடைய தந்தை அவரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டபோது பதில் எதுவும் வரவில்லை. இதனால், நண்பர் ஒருவரை அனுப்பி என்னவென்று பார்த்து வரும்படி கூறியிருக்கிறார்.

இதில், அந்த மாணவர் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நவ்தீப், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதில், தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்