< Back
தேசிய செய்திகள்
டெல்லி; பணத்தகராறில் சகோதரரை தாக்க வந்த இடத்தில் 2 சகோதரிகள் சுட்டு கொலை
தேசிய செய்திகள்

டெல்லி; பணத்தகராறில் சகோதரரை தாக்க வந்த இடத்தில் 2 சகோதரிகள் சுட்டு கொலை

தினத்தந்தி
|
18 Jun 2023 10:08 AM IST

டெல்லியில் பணத்தகராறில் சகோதரரை தாக்க வந்த இடத்தில் 2 சகோதரிகள் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் ஆர்.கே. புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கார் பஸ்தி பகுதியில் நபர் ஒருவருக்கும், சிலருக்கும் இடையே பணத்தகராறில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், அந்த நபரை தாக்கும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்று உள்ளனர். ஆனால், அவர் அந்த இடத்தில் இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நபரின் இரு சகோதரிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளனர். அவர்கள் பிங்கி (வயது 30) மற்றும் ஜோதி (வயது 29) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்களின் உடல்கள் எஸ்.ஜே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. பணத்தகராறால் இந்த படுகொலை நடந்து உள்ளது என போலீசார் கூறியுள்ளனர். தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்