< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசியகொடி பற்றி அவதூறு கருத்து: சித்தராமையா மீது போலீசில் புகார்
|11 Aug 2022 8:39 PM IST
தேசியகொடி பற்றி அவதூறு கருத்து கூறியதாக சித்தராமையா மீது பா.ஜனதாவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
சிக்கமகளூரு;
பா.ஜனதா கட்சியினரும், பஜ்ரங்தள அமைப்பினரும் சேர்ந்து சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
அந்த புகாரில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தேசியகொடியை பா.ஜனதாவினர் காவிக்கொடியாக்கி வருவதாக பேசியுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை பெற்றுகொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் தேசியகொடி பற்றி அவதூறாக பேசியதாக சித்தராமையாவை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.