< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோல்வால்கர் குறித்து அவதூறு: மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு
|9 July 2023 5:30 PM IST
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போபால்,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கோல்வால்கர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டார். அவரது பதிவு கோல்வால்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கறிஞர் ராஜேஷ் ஜோஷி என்பவர் போலீசில் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து திக்விஜய் சிங் மீது, வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ, 469, 500 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.