அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
|சென்னை ஐகோர்ட்டு அவதூறு வழக்கின் விசாரணையை தொடர கடந்த நவம்பர் 28-ந் தேதி உத்தரவிட்டது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவதூறு வழக்கின் விசாரணையை தொடர கடந்த நவம்பர் 28-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது, தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து கே.சி.பழனிச்சாமி சார்பில் வக்கீல் ரஞ்சிதா ரோத்தகி கேவியட் மனுவை கடந்த நவம்பர் 29-ந்தேதி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தனக்கு எதிரான கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.