< Back
தேசிய செய்திகள்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
தேசிய செய்திகள்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

தினத்தந்தி
|
27 March 2023 1:42 AM IST

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இந்து தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் அசோக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த பாலத்தை தரிசிக்கும் வகையில் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சுவர் எழுப்ப உத்தரவிட வேண்டும்.

ராமர் பாலத்தை தரிசிக்க ஏற்பாடு செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதாக உள்ளது. இப்பாலத்தை தரிசனம் செய்வதற்கும், வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்